இந்த வார ஆனந்த விகடனில் மதன் வாத்து எழுப்பும் ஒலி எதிரொலிப்பதில்லையாமே என்ற கேள்விக்கு...
ஒலி காற்றை வெளியே விடுவதாலும் , உள்ளே இழுப்பதாலும் உருவாகும் என்கிறார்... அது சரி தான்
ஆனால் எதிரொலிக்க வேண்டுமென்றால் ஒலியின் அலைகள் வெளிப்பட வேண்டுமாம் வாத்து எழுப்பும் ஒலியோ உள்வாங்கி எழுப்பும் ஒலியாம் என்வே எதிரொலிக்காது என்ற அர்த்தத்தில் எழுதியுள்ளார்.
முதலில் மதனுக்கு ஒலி பற்றிய அடிப்படை அறிவே இல்லை என்று புலனாகிறது...
ஒலி ஏற்பட காற்று உள்ளே இழுப்பது ,வெளியே விடுவது ஒரு பிரச்சனையே இல்லை.... முக்கியமாக ஒலி உருவாக அதிர்வு இருக்க வேண்டும் அந்த அதிர்வே ஒலி அலையாக கடத்தப்படுகிறது... அப்படி ஒலி அலைகளை வாத்து வெளியேற்றாவிட்டால் நம் காதுகளுக்கு எப்படி அது எழுப்பும் ஒலி கேட்கும்???
இப்படி அறிவியல் அடிப்படை அறிவே இல்லாத ஒருவரிடம் எப்படித்தான் கேள்விகள் கேட்கின்றனரோ ???
இவரும் தான் பெரிய புத்திஜீவி என்று நினைத்துக்கொண்டு எப்போ தான் அபத்தமான பதில்களை எழுதுவதை நிறுத்துவாரோ....
அய்யோ அய்யோ.........................
Friday, July 10, 2009
Subscribe to:
Comments (Atom)