Thursday, May 14, 2009
உணர்வை இழக்கலாமா?
தமிழகத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் வாழ்கின்றனர் ஈழத்தமிழர்கள்... யாழ்ப்பாணத்தை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பின்னர் ,சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தமிழர்களை வைத்துள்ளது சிங்கள இனவெறி அரசு. வன்னிப்பகுதி கைப்பற்ற பின்னர் அந்த மக்கள் நிலை இன்னும் மோசம் வீடின்றி,உறவுகள் பிரிக்கப்பட்டு ஆடு, மாடுகள் போல் முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்டுள்ளனர் தமிழர்கள். சிங்களனால் ஆக்கிரமிக்கப்பட்ட திரிகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் சிங்களக்குடியேற்றம் உள்ளிட்ட வன்பறிப்புகள் தமிழன் கலாசாரம் திட்டமிடப்பட்டு சிங்களனால் சிதைக்கப்பட்டு வருகிறது... அது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்து விடத்துடித்து கொத்துக்குண்டுகள் ,ரசாயன குண்டுகள் என என்னவெல்லாம் ஆயுதங்கள் உண்டோ அத்தனையும் கொண்டு தமிழனைக்கொல்கிறான் சிங்களன். தமிழனைக்கொல்........இது தான் சிங்கள அரசியலமைப்புச்சட்டம். தமிழனைக்கொல் ...... இது தான் பவுத்த பிக்குகள் சிங்களனுக்கு போதித்தது. கண்மூடி மவுனமாய் வேடிக்கை பார்க்கின்றன உலக நாடுகள்.... மிருகங்களை க்கொன்றால் கூட ஓடித்தடுப்பார்கள் . ஜப்பானியர்கள் திமிங்கல வேட்டையாடுவதை கடலில் சென்று ஆர்வலர்கள் தடுப்பதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம் ஆனால் சிங்களனின் மனித வேட்டையை தமிழக தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்கின்றனர் .. தமிழின ப்படுகொலையை தடுப்பார் யாருமே இல்லையா? போகட்டும் அவர்களாவது வெள்ளையர்கள் வேற்றின மக்கள் ஆனால் . தமிழகமே நீ கண்மூடி இருக்கலாமா? ஈழத்தமிழினம் அழிந்ததை வேடிக்கை பார்த்தான் தமிழக த்தமிழன் அன்ற அவப்பெயர் வரலாற்றில் எழுதப்பட அனுமதிக்கலாமா? வேறு எந்த இனத்துக்காவது இந்த அவல நிலை என்றால் ...அது மலையாளிகளாகவோ ,கன்னடர்களாகவோ , மராட்டியர்களாகவோ இருந்திருந்தால் அந்த மானிலங்கள் எப்படி கொதித்திருக்கும்? தமிழா நீ மட்டும் உணர்வற்ற பிணம் போல் இருக்கலாமா?